சிறுமி ஜெயஸ்ரீயை இழந்துவாடும் குடுப்பத்தாருக்கு ஆழ்ந்த இறங்களை மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் முனைவர் வாஞ்சிநாதன் தெரிவித்தார்

ஆழ்ந்த இரங்கல்


மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.



தற்போது உலகையே உலுக்கிய சிறுமியின் இந்த கொடுர மரணம் இனி எந்த நாட்டிலும் நடக்கக்கூடாது என்று எண்ணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் அதை மக்கள் முன்னிலையில் நடைபெற்றால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் மேலும் நேரடி நிகழ்ச்சியாக உரிய சட்டத்திருத்தம் செய்து நீதி அரசர்கள் தண்டனை வழங்கினால் குற்றம் நடப்பதை தடுக்க முடியும். இதை பரிசீலனை செய்யும்மா? நீதிமன்றம். குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் காலம் தாழ்த்தினால் மேலும் இது பலவிதமான குற்றம் நடப்பதை தடுக்க முடியாது இதை உணர்ந்து சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போது தான் மக்களாட்சி நடைபெறுகிறது என்று நம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். செய்யுமா? தமிழக அரசு. இதோ நாங்கள் கண்டனம் தெரிவிக்க உரிய சிறுமியின் கதறல்...



நான் தனியா வீட்டில் இருந்தேன்......


அவங்க 2 பேரும் வந்து என் வாயில துணி வெச்சு அடைச்சாங்க......கை, காலை கட்டிப்போட்டுட்டு தீ வெச்சு கொளுத்திட்டாங்க!!!


என்று சிறுமி வாக்குமூலம் தந்துள்ளது விழுப்புரம் மாவட்டத்தை அதிர்ச்சி விலகாமல் வைத்துள்ளது.


இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்!


திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சிறுமதுரை கிராமம்..


இங்கு வசித்து வருபவர் ஜெயபால்.. இவரது மகள் ஜெயஸ்ரீ.. 15 வயதாகிறது..


10 வகுப்பு படித்து வந்துள்ளார்.


இந்நிலையில், ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் இருந்து புகை வந்துள்ளது......


இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது


ஜெயஸ்ரீ உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது.


நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீயை மீட்ட அவர்கள், உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்..


தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டது.


அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்..


ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர்.


அப்போது, வீட்டில் தனியாக இருந்த தன்னை முருகன், கலியபெருமாள் 2 பேரும் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக சொன்னார்..


ஜெயஸ்ரீ சொன்ன வாக்குமூலத்தை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் பதிவு செய்து கொண்டார்.


 இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை போலீசார் கைது செய்தனர்.


இதில், முருகன் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் என தெரிகிறது..


கவுன்சிலராகவும் உள்ளாராம்.


இந்த சம்பவம் பற்றி ஜெயஸ்ரீயின் பெற்றோர் சொல்லும்போது,


எங்களுக்கும் அந்த 2 பேருக்கும் ஏற்கனவே பகை இருக்கிறது.. ஒருமுறை என் மகனைகூட அவர்கள் தாக்கிவிட்டனர்.. அவனை மீட்டு இதேபோல சிகிச்சை தந்து வருகிறோம்.மகனை தாக்கிய இவர்கள் மீது ஸ்டேஷனில் புகார் தர போயிருந்தோம்..அந்த ஆத்திரத்தில்தான் மகளை இப்படி தீ வைத்து வைத்து எரித்து விட்டனர்..அவர்களை சும்மா விடக்கூடாது என்று கதறி அழுதனர் இதையடுத்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். "ஜெயஸ்ரீயின் அத்தை மஞ்சுளா சொல்லும்போது


வாயில் துணியை அமுக்கிட்டு, கை காலை போட்டு தீ வைச்சு கொளுத்திட்டாங்களே.. என் புள்ளைய பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டங்களே,, முன்னாடியே பகை இருந்துச்சு.. எங்க மேல இருக்கிற கோபத்துல பச்ச புள்ளைய எரிச்சிட்டாங்களே" என்று கதறி அழுதபடியே சொன்னார்.இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்! 95 சதவீதம் உடம்பெல்லாம் தீக்காயம் அடைந்த நிலையில்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்..இந்நிலையில் சிறுமியின் மரணம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் கொலை வழக்காக இதை மாற்றி விசாரணை நடைபெறக்கூடும்... சிறுமி தந்த அந்த வாக்குமூலம்தான் வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


நாளுக்கு நாள் லாக்டவுன் கிரைம்கள் அதிகமாக நடந்து வரும் சூழலில் இந்த விழுப்புரம் சம்பவமும் அதிர்ச்சியை தந்து வருகிறது.


Post a Comment

புதியது பழையவை