அதிமுக தலைமை சிறுமி கொலை.. தொடர்புடைய இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவரையும் அதிமுகவில் இருந்து நீக்கி ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே 10ம் வகுப்பு படிக்கும் 15வயது சிறுமி முன்பகை காரணமாக உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.



இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்கள் கலிய பெருமாள் மற்றும் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மரண வாக்கு மூலம் அளித்தார்  95% தீ காயங்களுடன் இருந்த ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து திருவெண்ணைநல்லூர் மக்களிடையே அச்சத்தையும் இளைஞர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது


Post a Comment

புதியது பழையவை