விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா நடைபெற்றது
செஞ்சி செக்கோவர் நிறுவனம் மற்றும் விழுப்புரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இணைந்து மத்திய அரசின் போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வினை தொடர்ந்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இயற்கை சார்ந்த உணவுகள் வழங்கப்பட்டது
இந்த தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான இயற்கை சார்ந்த ஆரோக்கிய உணவு குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது
இந்நிகழ்ச்சி செக்கோவர் இயக்குனர் திரு.M.சூசைராஜ் முன்னிலையில் நடைபெற்றது திருமதி லலிதா விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் திரு பிரேம்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தலைமை ஏற்று இந்நிகழ்வை தொடங்கி வைத்தனர் சிறப்பு விருந்தினராக செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டார்
கருத்துரையிடுக