தையூர் குப்பம்மாளையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தையும் செயலிழக்க செய்த புளிய மரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தை சேர்ந்த தையூர் ஊராட்சியில் கடந்த 100 வருட பழமைவாய்ந்த புளியமரம் தற்போது பெய்த மழையின் காரணமாக மரத்தின் அருகாமையில் கடந்த 30 ஆண்டுகாலமாய் வீடுகட்டி வாழ்ந்து வந்த குப்பம்மாள் (வயது 70) என்ற மூதாட்டியின் வீட்டின் மீது புளிய மரம் விழுந்து வீடு சேதமடைந்துள்ளது இந்த மரம் விழுந்து 3 நாட்களாகியும் ஊராட்சி நிர்வாகமோ, வட்டார வளர்ச்சி அலுவளர்களோ கிராம நிர்வாக அலுவளரோ , தாலுக்கா அலுவளர்களோ இது வரை கண்டுகொள்ளவில்லை என்று குப்பம்மாள் கூறியுள்ளார்.



மேலும் விசாரித்த போது குப்பம்மாள் கூறுகையில் கடந்த 30 வருடமா இங்கு வசித்து வருகிறேன் எனக்கு பிள்ளைகள் இல்ல நா மட்டுதான் வாழ்ந்து வர என்னால் முடிந்த கூலிவேளைக்கு போய் என் வைத்த கழுவிக்கிற குறிவி மாதிரி சிறுக சிறுக சேர்த்து இந்த குறிவி கூட்ட கட்டுன ரெண்டு நாளக்கி முன்னாடி பெய்த மழையில பக்கத்திலிருந்த புளிய மரம் என்னோட வீட்டு மேல விழுந்து மேல் கூரை ஓடு ஒடஞ்சு போச்சு



இப்போ என்னால வீட்டுக்குள்ள போக முடியல பயமா இருக்கு மரத்தின் கிளைகள் எல்லாம் ஓட்ட ஒடச்சிகிட்டு வீட்ட சேதபடுத்திய படி இருக்கு சோறு பொங்க முடியல பட்டினியாவே இருக்க மூனு நாளா எந்த அதிகாரியும் வந்து பாக்கல எனக்கு என்ன பன்றது தெரியல வீட்டுவாசலிலேயே பார்த்த விழி பூத்தபடி யாராவது உதவிக்கு வரமாட்டாங்களா என காத்துக்கிட்டு இருக்க கண்ணீர்யுடன் குப்பம்மாள்.



வீடு இழந்து வாடும் இந்த குப்பம்மாள் முதாட்டிக்கு வருவாய் துறையோ, ஊரக வளர்ச்சி துறையோ விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் விரைந்து உத்தரவிடுமா?  விழுப்புர மவட்டத்தில் பேரிடர் மேலான்மை என்ற ஓரு துறை  உயிருடன் உள்ளதா எனும் கேள்வி மக்களிடையே எழுகிறது.  


Post a Comment

புதியது பழையவை