விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து இந்து முன்னனி ஆர்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்து முன்னனி அமைப்பினர்.  இந்து பெண்களை விபச்சாரிகள் என இழிவுபடுத்தி பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து கைது செய் கைது செய்  இந்து பெண்களை இழிவுபடுத்தி பேசிய மக்கள் பிரதிநிதி திருமாவளவனை கைது செய் என்ற ஆர்பாட்ட முழக்கத்துடன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்



இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் எனவும் இந்து மதத்தையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி செயல்படுவதாலும் இந்து மதத்தை தொடர்ந்து அறுவறுப்பாக பேசிவருவதால் தமிழ்நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிலிருந்து ரத்து செய்ய கோரியும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரி இந்து முன்னனி அமைப்பினர் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் போராட்டதில் ஈடுபட்டனர்



இது குறித்து செஞ்சி D1 காவல்நிலையத்தில் இந்து முன்னனி சார்பாக அந்த அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.வி. சுப்பரமணியம் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது


Post a Comment

புதியது பழையவை