விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தலுக்கா வல்லம் ஒன்றியத்தை சேர்ந்த தையூர் ஊராட்சியில் 100 வருட பழமை வாய்ந்த புளியமரம் அதே கிராமத்தில் புளிய மரத்தின் அருகாமையில் வீடுகட்டி வாழ்ந்து வந்த முதாட்டி குப்பம்மாளின் வீட்டின் மீது இயற்கை சீற்றத்தின் காரணமாக மரம் உடைந்து விழுந்து ஓடுகள் உடைந்து மரக்கிளைகள் வீட்டின் உள்ளே நுழைந்தன இவை விழுந்து 3 நாட்களாகியும் ஊராட்சி நிர்வாகமோ வட்டார வளர்ச்சி அலுவளர்களோ வருவாய் துறையோ, ஊரக வளர்ச்சி துறையோ விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? எனற செய்தி 19-10-2020 அன்று வெளியிடப்பட்டது
அதன் எதிரொலியாக 20-10-2020 இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவளர்கள் பார்வையிட்டு மரம் வெட்டபட்டன மேலும் குப்பம்மாள் வீட்டை சரிசெய்து புதிய ஓடுகள் மாற்றபடுவதாக வட்டாரா வளர்ச்சி துறை அலுவளர்கள் தெரிவித்தனர்
மேலும் குப்பம்மாளை விசாரித்த போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த எனக்கு உடுக்கை இழந்தவன் கைபோல் அங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு என்ற வாசகத்திற்க்கேற்ப்ப உதவி செய்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் துறிதமாய் செயல்பட்ட மாவட்ட ஆட்சியருக்கும் திட்ட இயக்குநருக்கும் வட்டார வளர்ச்சி துறைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார்.
கருத்துரையிடுக