மின் கம்பியில் உராசிய பா.ஜ.க கொடி அகற்றம்


திருவள்ளுவர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் குண்டுமேடு என்ற பகுதியில் இன்று பா.ஜ.க வினர் நடத்திய வேல் யாத்திரையின் வரவேற்ப்பு நிகழ்ச்சிக்காக சாலையின் ஓரத்தில் தற்காலிக கொடி கம்பம் நடப்பட்டது. இக்கம்பம் மின் கம்பியில் உராய்ந்த வண்ணம் இருந்ததால் மின் இணைப்பு இடையூறு ஏற்ப்பட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். இதனை கண்டறிந்த திருவள்ளுவர் மாவட்ட அமுதம் ரிப்போர்ட்டர் திரு.பால்ராஜ் அவர்கள் இக்கம்பத்தை அகற்ற கோரி காவல் துறைக்கு புகார் அளித்தமையால் அப்பகுதியில் தற்காலிகமாக பணியில் இருந்த காவல் துறை கண்காணிப்பாளார் உதவியுடன்  மின் கம்பியில் உராய்ந்த வண்ணம் இருந்த பா.ஜ.க வினரின் தற்காலிக கொடி கம்பம் அகற்றப்பட்டது


Post a Comment

புதியது பழையவை