செஞ்சியில் வேளாண் மசோதாவை எதிர்த்து உழவர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாவை கண்டித்து செஞ்சி உழவர் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்,

மத்திய அரசு கொண்டுவந்த முன்று விதமான வேளாண் மசோதவை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போரட்டம்,

  •  உணவுப்பொருட்களை உயிர்உரிமைப் பட்டியலில் (அத்தியாவசம்) இருந்து நீக்கியதை கண்டித்தும்,.
  •  வேளாண் விளைப்பொருட்களை பெருநிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யும் மசோதாவை கண்டித்தும்.
  •  பெருநிறுவனங்களும்,பன்னாட்டு நிறுவனங்களும் உழவர்களிடம் நீண்டகால ஒப்பந்த முறையில் நிலத்தை கையகப்படுத்தும் முறையை கண்டித்தும்,

செஞ்சியில் உழவர் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் போரட்டம் நடத்தினர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்  செஞ்சி சுற்று வட்டர பகுதியில் இருந்து பெருந்திரள் விவசாயிகள் கலந்து கொண்டனர்,

Post a Comment

புதியது பழையவை