அகரம்தென் ஊராட்சிக்கு உட்பட்ட பொது மக்கள் சாலை மறியல்

           

செங்கல்பட்டு மாவட்டம் அகரம்தென் ஊராட்சிக்கு உட்பட்ட சத்தியா நகர், கஸ்பாபுரம்,வெங்கம்பாக்கம் திருவச்சேரி,பதுவஞ்சேரி ஆகிய கிராம பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக சாலையை மறித்து போராட்டம் நடத்தினர், இவர்கள் கோரிக்கையானது

  •  வீட்டு மனை பட்டா வழங்கிடவும்.    

  • வீட்டு மிண் இணைப்பு வழங்கிடவும்
  • ஊருக்கு செல்ல சாலை அமைக்க கோரியும்
  • அகரம்தென்,மற்றும் சத்தியா நகர், வெங்கம்பாக்கம், ஆகிய இடங்களில் போலீஸ் பூத் அமைத்து தர கோரியும்,
  • வெங்கம்பாக்கத்தில் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டை வனத்துறை ஆக்கிரமித்து உள்ளதால் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியும்,
  • அரசு தொகுப்பு வீடு மற்றும் கழிப்பறை கட்டி தர வலியுறுத்தியும்,
  • கழிவு நீர் கால்வாய் கட்டி தர வேண்டியும்,
  • படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து தர வேண்டியும்


இந்த எட்டு வித கோரிக்கையும் வலியுறுத்தி சேலையூர் காவல் துறை அனுமதியுடன் போது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்,

இந்த மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் செவிசாய்ப்பாரா? 

                                          செய்தியாளர்  தமிழரசு உடன் ராஜ்

 

 

 

                        

Post a Comment

புதியது பழையவை