தாருமாறக கொட்டப்படும் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கழிவு, மக்களுக்கு தீர்வுகிடைக்குமா?

 செஞ்சி பேரூராட்சியால் பள்ளிகளுக்கு அருகாமையிலும் சாலைகளுக்கு அருகாமையிலும் ஆற்றங்கரைக்கு அருகாமையிலும் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்

இக்குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், தற்பொழுது பெய்துவரும் மழைநீர் தேங்கி  குப்பை கழிவுகள்  ரசாயனமாக மாரி, மிகுந்த துர்நாற்றத்துடன் ஆற்றிலும்  நீரோடைகளிளும்  கலக்கப்படுகிறது  அதுமட்டுமல்லாது சாலைகளில் செல்லும்  மக்களுக்கும் பள்ளிகளுக்கு  செல்லும் மாணவர்களுகும் நோய் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது  இதுபற்றி பலமுறை செய்திகளில் புகார்கள் தெரிவிக்கப்பட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், குப்பைக்கழிவுகளை கொட்டுவதற்கு இடமில்லை என, மழுப்பிக்கொண்டு கிடப்பிலேயே போட்டுக்கொண்டிருக்கும் செஞ்சி பேரூராட்சியின் மீது மாவட்ட நிர்வாகம் பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?


Post a Comment

புதியது பழையவை