35 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து ஒடாய் தேய்ந்துபோன எங்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடகோரி பல முறை தலைமைசெயலகத்திலும் எங்கள் துறைசார்ந்த ஆணையரகத்திலும் 20க்கும் மேலான மனுக்கள் கொடுத்தும் பலனின்றி போனதால் எங்கள் துறை மீது செவிசாய்க்காத அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இப்போராட்டம் பொதுச்செயலாலர்
ரஞ்சிதம் தலைமையில் நடைப்பெற்றது. போராட்டத்தில் சுமார் 80 பெண்கள் கலந்துகொண்டனர்.
போராட்டகாரர்களை காவல்துறையினர் கைதுசெய்து திருமணமண்டபத்தில் அடைத்துவைத்து மாலை சுமார்
6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
கோரிக்கை
1. 1.4.2003-க்கு பின்னர் மகளிர் ஊர்நல அலுவலராக
மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு ஆணையின்படி அங்கன்வாடி பணியில்
பணிபுரிந்த காலத்தினை 50% விழுக்காடு எடுத்துக்கொண்டு ஓய்வூதிய பலன்கள் வழங்கக் கோருகிறோம்.
2. சிறப்பு
ஓய்வூதியம் 2000/- என்பதை முறையான ஓய்வூதியமாக மாற்றி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய
பலங்கள் பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்தே கணக்கிட்டு வழங்ககோருகிறோம்
கருத்துரையிடுக