செஞ்சி அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்

செஞ்சி அருகே செஞ்சி, சேத்பட் நெடுஞ்சாலையில் ஈச்சூரிலிருந்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நெல்மூட்டைகள் ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது நான்கு சக்கர சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவம் அறிந்த காவல்துறை விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் ஈச்சூரை சார்ந்த விவசாயி கோவிந்தன் (45) என்பவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார் அவருடன் இருந்த மனைவி காமாட்சி (40) காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

                                                                                            செய்தியாளர்           த.மதியழகன்

Post a Comment

புதியது பழையவை