
இதை வணிகர்கள் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை. இதனால் வணிகர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த பேனரை நீக்கினார்கள் .பேனர் நீக்கியதை கண்டித்து விசிக அமைப்பினர் குறிப்பிட்ட சமூக மக்களை திரட்டி போரட்டம் நடத்திய உடன் விக்கிரவாண்டி வருவாய் துறை மற்றும் காவல்துறை குறிப்பிட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கார் பேனர் வைத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை காற்றில் பறக்க விட்டார்கள். இதனால் அந்த பகுதியில் மீண்டும் மோதல் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது .இப்பிரச்சனையால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத வருவாய் துறை மற்றும் காவல்துறையின் போக்கை கண்டித்து அதிருப்தியில் மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளார்கள், இந்த தகவல் அருகில் உள்ள கிராமங்களில் காட்டு தீயாக பரவி வருகிறது ...
செய்தியாளர் மு.ஏழுமலை
கருத்துரையிடுக