செஞ்சியில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்(18/01/2021 முதல் 17/02/2021 வரை) நெடுஞ்சாலைத்துறை கோட்டம் விழுப்புரம், உட்கோட்டம் செஞ்சி நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பாக சாலை பாதுகாப்பு விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி செஞ்சி நான்கு முனை சந்திப்பில் தொடங்கி காந்தி பசாரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ வினாயகர் ஆலயம் வரை நடைபெற்றது. பேரணியில் மக்களுக்கு சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து தலைக்கவசம் உயிர்க்கவசம், வேகம் விவேகம் அல்ல வேகத்தை குறைப்போம் விபத்தை தவிர்ப்போம், நடக்கப்பாரு இடப்பக்கம் கடக்கப்பாரு இருபக்கம் போன்ற வாசகங்கள் இடம்பெற்ற விளம்பர பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், ஒலி பெருக்கி மூலமும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நெடுந்சாலைத் துறையுடன் இணைந்து செஞ்சி காவல்துறை, செஞ்சி போக்குவரத்து காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், வட்டாட்சியர் அலுவலகம் செஞ்சி சிறப்புநிலை பேரூராட்சி, செஞ்சி அரிமா சங்கம், செஞ்சிக்கோட்டை ரோட்டரி சங்கம், ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செஞ்சி தொழிற்பயிர்ச்சி நிலையம் உள்ளிட்டோர்களுடன் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி விழா நடைபெற்றது.
செய்தியாளர் த.மதியழகன்
கருத்துரையிடுக