விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து 3 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
செஞ்சியிலிருந்து சென்னை மற்றும் புதுச்சேரி, மேல்மலையனூரிலிருந்து சென்னை ஆகிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்து சேவையை இயக்க வேண்டி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்களிடம் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர் இந்த மனுவினை ஏற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் செஞ்சியிலிருந்து சென்னை, புதுச்சேரி மற்றும் மேல்மலையனூரிலிருந்து சென்னை ஆகிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்து சேவையை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அந்த வழித்தடங்களில்
புதிய பேருந்துகள் சேவை தொடக்கவிழா 22/08/2021 அன்று செஞ்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டல மேலாளர் செல்வம் தலைமையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 3 வழித்தடங்களில் கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர் வணிகம் துரைசாமி, செஞ்சி அரசு பணிமனை மேலாளர் துரை, கட்டு காப்பாலர் குணசேகரன் மற்றும் திமுக ஒன்றிய, நகர செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: த.மதியழகன்.
கருத்துரையிடுக