அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசில் பணிபுரியும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு, 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு, 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. இந்த விடுப்பை பிரசவத்திற்கு முன்,பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு முழு சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது, இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 12 மாத மகப்பேறு விடுப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-க்கு முன்னரே பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு இருந்தால், 365 நாட்களுக்கு மிகாமல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக