டோக்யோ பாரா ஒலிம்பிக்: வெள்ளிப்பதக்கம் வென்றார் பவினா!!

 
டோக்யோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஓலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் - சீன வீராங்கனை ஜாங்க் மியா மோதினர். இதில் பவினா பென் படேல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஜாங்க் மியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் இன்று இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ்யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார் பவினா. இதன்மூலம் டோக்யோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Post a Comment

புதியது பழையவை