தீவனூர் அருள்மிகு சுயம்பு பொய்யாமொழி விநாயகர் திருக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கோவில் பரம்பரை அறங்காவலரின் அதிகாரம் பெற்ற முகவர் N.மணிகண்டன் அவர்கள் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.C.சிவக்குமார் MLA அவர்களை மரியாதை நிமித்தமாக வல்லம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து கோவில் பிரசாதம் வழங்கினார் அத்துடன் ஆலயத்தின் அடிப்படை வசதிக்கான மனுவினை அளித்தார். மனுவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தீவனூர் கிராமத்தில் அருள்மிகு சுயம்பு பொய்யாமொழி விநாயகர் திருக்கோவில் உள்ளது இக்கோவில் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற விநாயகர் கோயிலாகும். இத்திருக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க பொது ஸ்தலமாகும். இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு கடந்த 06/06 2008-ல் குடமுழுக்கு வெகு விமர்சியாக நடைபெற்றது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் மிக அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர். ஆங்கில வருடப்பிறப்பு, காணும் பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை மாதத்தில் 11 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா, விநாயகர் சதுர்த்தி ஆகிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக வந்த வண்ணம் உள்ளதால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதியாக குடிநீர் வசதி, கழிவறை, குளியலறை, சிமெண்ட்சாலை, பொதுமக்கள் தங்கும் விடுதி, அன்னதான கூடம், கோயிலை சுற்றி மாடவீதி, மின் விளக்கு, நாடக மேடை மற்றும் கோயிலுக்கு சொந்தமான குளங்களை சீரமைத்தல் போன்ற அனைத்து வசதிகளையும் தொகுதி பொது நிதி மற்றும் சுற்றுலாத்துறை நிதியிலிருந்து மேற்படி வசதிகளை செய்து தருமாறு கூறியுள்ளார். உடன் பாட்டாளி மக்கள் கட்சி மைலம் வடக்கு ஒன்றிய செயலாளர் P.சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பிரிசித்தி பெற்ற தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டி மைலம் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு!!
Dr VANJINATHAN
0
கருத்துரையிடுக