ஆகஸ்ட் -25, தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர், மு.நடிகர் சங்க தலைவர் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர், புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 69-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கேப்டன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு துறிஞ்சம்பூண்டி மனநல காப்பகத்திலுள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் திரு.எல்.வெங்கடேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் திரு.M.G.சின்னதுரை தலைமையில், மேல்மலையனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.M.தேவகுமார் முன்னிலையில், மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில்
மேல்மலையனூர் வட்டம் துறிஞ்சம்பூண்டி கிராமத்தில் உள்ள "குளுனி அபய இல்லம்" எனும் மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.ஏ.முத்துசாமி அவர்கள். உடன் இளைஞர் அணி செயலாளர் முனுசாமி, சாமிநாதன் மற்றும் தேமுதிக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: த.மதியழகன்.
கருத்துரையிடுக