விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி பேரூராட்சி குளத்தில் மிதந்து கிடந்த சடலத்தை பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கும்
தீயணைப்பு துறையினர்க்கும் தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த செஞ்சி
தீயணைப்பு துறை சிவகுருநாதன் LF, சதிஷ்குமார், ராஜ்குமார் ஆகியோர் சடலத்தை மீட்டு காவல்
ஆய்வாளர் சக்தி அவர்களிடம் ஒப்படைத்தனர்
மீட்ட
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முன்டையம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்
இது குறித்து செஞ்சி காவல்துறை ஆய்வாளர் திரு.சக்தி அவர்களின் விசாரனையில்
தெரியவந்தது இறந்தவர் செஞ்சி கிருஷ்ணாபுரம் 43 சுந்தர வினாயகர் கோவில் தெருவை சேர்ந்த
குப்புசாமியின் மகன் வீராசாமி (80)
என தெரியவந்தது இவருக்கு கோவிந்தம்மாள் மனைவி (இறப்பு), பாபு (48), சுந்தர் (45), ராஜேந்திரன்(43), முரளி(40),
நான்கு மகன்களும் உமா(32) என்ற மகளும் உள்ளனர்
இது குறித்து உறவினர்கள்
கூறியவது
கடந்த 4 நாட்களாக
இவரை காணவில்லை என செஞ்சி காவல்துறையினருக்கு புகார் கொடுத்தோம் காணவில்லை என்ற செய்தியை
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் களில் தெரிவித்தோம் தொடர்ந்து தேடிய நிலையில் இன்று குலத்தில்
அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக மக்கள் கூறியதால் வந்து பார்த்தோம் சடலமாய் கிடந்தவர்
உறவினர் என்று அறிந்ததும் அதிர்ந்துபோனோம்.
மேலும் செஞ்சி
காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து கொலையா தற்கொலையா என்ற விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்
கருத்துரையிடுக