செஞ்சியில் 26/09/2021 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. செஞ்சி லயன்ஸ் சங்கம், திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம் லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட், புதுச்சேரி ஸ்ரீ மணக்குள வினாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து செஞ்சி காந்தி பஜாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். இந்த கண்சிகிச்சை முகாமினை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் மருத்துவர்களால் பொதுமக்கள் 153 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் 21 நபர்களுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டது, பின்னர் அவர்களை கண் அறுவை சிகிச்சைக்காக ஸ்ரீ மணக்குள வினாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இம்முகாமில் செஞ்சி லயன்ஸ் சங்கம் மற்றும் திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக