சுமார் 108 நாடுகளில் பனை மரம் உள்ளது இந்த பனை மரமானது நம் மக்களின் வாழ்வில்
அடிப்படை தேவைகளில் ஒன்றாகவே இருந்தன ஆனால் தற்போது அழிந்து வருகின்றன. இந்தபனை மரமானது
தமிழ்நாட்டில் மட்டும் அதிகம் காணப்பட்டன இவை அழிவதற்கான முதல் காரணம் 1. மக்கள் எல்லோரும்
இயற்க்கையை நம்பாமல் செயற்கையை நம்பியதால் (கார்ப்ரேட் கம்பனி) 2. தமிழ்நாட்டில் கள்
இறக்குவதற்கு தடைச்சட்டம் உள்ளதால் இவை அழிவின் விளிம்பில் உள்ளது பனைமர கள் இறக்க
அனுமதி இருந்த வரை அதாவது அதன் மூலம் வருவாய் வரும் வரை அவை பாதுகாக்கப்பட்டன அதன்
பின் வரட்சியின் காரணமாக இப்பனை மரங்களை பாதுகாக்காமல்
50 மற்றும் 100ரூ க்கு செங்கள் சூளைகளுக்கும், சுண்ணாம்பு சூளைகளுக்கும் விற்கப்பட்டன
தமிழகத்தில் மட்டும் சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முப்பது கோடி பனை மரங்கள்
இருந்தன
ஆனால்
தற்போது நான்கு கோடி மரங்கள் மட்டுமே இருக்கின்றன அவையும் அழிந்து வருகின்றன. பனைமரமானது இரண்டு வகை 1.பெண் பனை
2. ஆண்பனை பெண் பனையை பருவப் பணை என்றும் ஆண் பனையை அழகுப் பனை என்றும் குறிப்பிடபடுகிறது.
இந்த பனைமரமானது பத்து ஆண்டுகளுக்கு பிறகு 15 அடி உயரம் வளரும் அதன்பின் பூ பூத்து
காய் காய்க்கும் அப்போது தான் ஆண் பனை பெண் பனை எவை என்று தெரிந்து கொள்ளமுடியும். தமிழகத்தில் மாவலி என்றால் கார்த்திகை தீபம் நினைவுக்கு வரும் இந்த தீபத்தன்று ஆண்
பனையின் பாளையை வெட்டி தீயிட்டு கொளுத்தி அந்த கரியை துணிகளில் சுற்றி பனை மட்டையை
கிழித்து அதன் இடுக்கில் வைத்து மீண்டும் தீ மூட்டி மகிழ்ச்சியாய் தலைக்கு மேலே மாவலியோ
மாவலி என்ற படியே சுற்றி சிறியவர் முதல் பெரியவர் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோமே
அந்த பனையை அழித்துதான் இனி வரும் காலங்களில் இந்த மாவலி கார்ப்ரேட் கடைகளில்கிடைக்கும்
இன்றய காலத்தில் தான் நவினம் என்ற பெயரில் நம் உடல் நிலையை பாதிக்கும் வீணபோன நெகிழி
பாத்திரங்களையும் நெகிழி காகித குப்பைகளை பன்படுத்தி வருகிறோம். ஆனால் முன்னோர்கள்
வாழ்ந்த காலத்தில் அதிகமாக பனை மரப் பொருட்களையே பன்படுத்தி வந்தனர்
Ø அரைப்படி முதல் ஐந்து படிவரை
கொள்ளவு கொண்டவையை கொட்டான் எனவும்
Ø ஏழு படியிலிருந்து பதினொரு
படி வரை கொள்ளவு உள்ள பெட்டி வகைகள் சீர்வரிசை பெட்டியாகவும்
Ø இருபது படியிலிருந்து முப்பது
படிகள் கொள்ளளவு கொண்ட நார்பெட்டிகள் அரைப்பெட்டிகள்
எனவும்
Ø ஐந்து மரக்கால் அளவுள்ள
பெரிய நேர்த்தியான நார்பெட்டிகள் கடகம் எனவும்.
Ø நெல் மற்றும் இதர தானிய
வகைகளை காற்றில் தூற்றி தரம் பிரிக்க பயன்படுத்துபவை தூற்றுப் பெட்டிகள் எனவும்
Ø தானியங்களை புடைக்க பயன்படுத்தியவை
சொழகு அல்லது முறம் எனவும்
Ø சரக்குகளை கட்டி அனுப்ப
பனை பாய்களையே பயன் படுத்தி வந்தனர்
இதை தவிர பனை மட்டையிலிருந்து நார் எடுக்கப்பட்டு பிரஷ்கள், மெத்தைகள், ஆடைகள், கால்மிதிகள், அழகு தனப்பொருட்களும் தயாரிக்கப் படுகின்றன.பனை மரத்திலிருந்து
எடுக்கப்படும் பதநீர்குடிப்பதால்
உடலில் உள்ள நோய்தொற்று உண்டாக்கும்கிருமிகளை தடுக்கின்றன மற்றும் இரத்தத்தில் உள்ளசிவப்புஅனுக்கள் விருத்தியாகும் என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது
முனோர்கள்பனையின் மகுத்துவத்தை உணர்ந்தப் படியால்
பனை விவசாயம் செய்தனர் ஆனால் அதன் பின் வந்த தலைமுறையினர் பனை விவசாயம் செய்யவும்இல்லைஇருந்த மரங்களை பாதுகாக்கவும் இல்லை பனை மரம் ஏறுபவர்களுக்கு செந்தமாகமரம் இல்லாதால் வேறுதொழிலுக்கு சென்றுவிட்டனர் ஆனால் இன்றைய தலைமுறையினர் சற்றும் விழித்துகொண்டு
பனை விதைகளை நட தொடங்கியுள்ளனர் . மகிழ்ச்சி
இக்கட்டுரை அ.சக்திவேல்
கருத்துரையிடுக