கடந்த அ.இஅதிமுக ஆட்சியின்போது உள்ளட்சி தேர்தல் நடத்தபடாமல் நீண்ட நாட்கள் கடத்தபட்ட நிலையில்
தமிழ் நாட்டின் மொத்த மாவட்டம் 38 அதில் 27 மாட்டங்களுக்கு நீதி மன்ற உத்தரவால் ஊரக உள்ளாட்சி தேர்தல்
நடத்தப்பட்டது. புதியதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி,
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் வார்டு
மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக உள்ளாட்சி தேர்தல் நடத்தபடாமல் இருந்தன ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தபடாமல் உள்ள 9 மாட்டங்களுக்கும் அக்டோபர் 15 க்குள் தேர்தலை
நடத்திமுடிக்க தேர்தல ஆணையத்திற்கு உச்சநிதிமன்றம் உத்தரவு பிரப்பித்திருந்தன அதன்
அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அனைத்து கட்சி பிறதிநிகளுடன் ஆலோசனை
நடத்தினார் அதன் பின்
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன இந்த தேர்தல் அக் 6 அக் 9 என இரண்டு கட்டமாக நடத்தபடும் என அறிவிப்புகள் வந்த நிலையில் இன்று 6-10-2021 முதற்கட்ட வாக்குபதிவு தொடங்கப்பட்டது இந்த வாக்குபதிவு காலை 7முதல் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும் இதற்காக 7,921 வாக்குமையங்கள் ஒதுக்கபட்டுள்ளன விழுப்புரம்மாவட்டம், செஞ்சி, கண்டமங்கலம், வானூர், விக்கிரவாண்டி, மழுவந்தாங்கள், மலையரசன் குப்பம்,அத்தியூர், துத்திப்பட்டு,பொன்னங்க்குப்பம் போன்ற ஊராட்சியில் தேர்தல் நடத்தப்பட்டது
அதில் செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த துத்திபட்டு,பொன்னங்குப்பம் இரண்டு ஊராட்சியும் ஒரு பஞ்சாயத்தை கொண்டதாக உள்ளது இதில் பொன்னங்குப்ப ஊராட்சி பொதுமக்கள் இன்று தேர்தலை புறகணித்தனர் இதனால் வாக்குசாவடி வெறுச்சோடி காணப்பட்டது
பொன்னங்குப்பம் கிராமபொதுமக்கள் தேர்தல் புறகணிப்பு
செஞ்சியை அடுத்த துத்திபட்டு, பொன்னங்குப்பம் இரண்டு ஊராட்சியையும் உள்ளடக்கியது துத்திபட்டு பஞ்சாயத்து இதில் துத்திபட்டு 2460 வாக்களர்களையும் பொன்னங்குப்பம் 1400 வாக்காளர்களையும் கொண்ட பஞ்சாயத்தாக விளங்குகிறது கடந்த 20 ஆண்டுகாலமாக ஊரக ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடபட்டு வந்தது இதனால் மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் எந்த திட்டங்களும் பொன்னங்குப்ப ஊராட்சிக்கு கிடைப்பதில்லை
மக்கள் கலைந்து
சென்றனர் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளபடாததால் பொன்னங்குப்பம் கிராம பொதுமக்கள்
இன்று தேர்தலை புறகணித்தனர்
கருத்துரையிடுக