விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் "பாண்டிச்சேரி முதல் கிருஷ்ணகிரி" தேசிய நெடுஞ்சாலை செஞ்சி சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலமானது சுமார் 15, ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் சரியான பராமரிப்பின்றி மேம்பாலம் கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு மிகவும் அபாயகரமான குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர். இதுகுறித்து பொது மக்கள் நெடுஞ்சாலைத் துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நெடுஞ்சாலைத்துறை மெத்தனம் காட்டிவந்ததால் விரக்தியடைந்த பொது மக்கள் இன்று சாலை மரியலில் பாடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்த தகவல் அறிந்த காவல்த்துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் விழுப்புரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மேம்பாலம் வழியாக கடந்து செல்லும் அரசு அலுவலர்களோ, அரசு உயர் அதிகாரிகளோ நமக்கென என்று மெத்தனப்போக்காகவே பயணித்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்த மேம்பாலம் அருகிலேயே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்பாலத்தை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வாரா என சமூக ஆர்வளர்களின் கேள்வி?
கருத்துரையிடுக