தமிழகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய நோய்த் தொற்று பெருமளவு குறைந்துள்ளதால், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நவம்பர் 1ம் தேதியில் இருந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில் நவ.1 முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதில், காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை.
எந்த வகுப்பு மாணவர்களை எந்தெந்த நாளில் வர வைக்க வேண்டும் என்பதை அந்தந்தப் பள்ளிகளே முடிவு செய்யலாம். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை, விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம். ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் மாணவர்கள் படிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
கருத்துரையிடுக