முத்துராமலிங்கத் தேவர் , அக்டோபர் 30, 1908 ஆம் ஆண்டு பிறந்தார் அக்டோபர் 30, 1963) அன்று மறைந்தார் இவர் ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி
சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய
தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர்
குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர்.
மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114-வது குருபூஜை விழாவையொட்டி விழுப்புரம்
மாவட்டம் செஞ்சியில் தேவர் பேரவையினரால் 8-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடத்தினர் அவ்விழாவில் அன்னாரின் திருஉருவ
படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இவ் விழாவில்
செஞ்சி தேவர் பேரவை நிர்வாகிகள் ஜெயராஜ், தெய்வம், தவமணி, பால்பாண்டி, முத்துப்பாண்டி,
சசிகுமார், சண்முகம், பத்மநாபன், அண்ணாதுரை,
கலியபெருமாள், செந்தில்குமரன், திருவேங்கடம், சுதாகர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக