திண்டிவனம் வட்டம் வெள்ளிமேடடுபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் மற்றும் வெள்ளிமேடுபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வெள்ளிமேடுபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் சுமார் நூறு நபர்களுக்கு கர்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்க பட்டுள்ளார்கள். அவர்களுக்கு, முகாம் ஏற்பாடு செய்த சங்கத்தின் சார்பில் பழவகைகள், டிரைஃப்ரூட்ஸ், நட்ஸ் போன்ற சத்தான பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் 35 நபர்களுக்கு கண்டறியப்பட்ட கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் வெள்ளிமேடுபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 100 நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. பெண்கள் நலனில் சுகாதாரத்துறை தனி கவனம் செலுத்தினால் இதுபோன்ற பாதிப்புகள் குறைவதற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் மருத்துவ அலுவலர்கள் Dr.கலைபிரதாப், Dr.சன்மதி, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்க தலைவர் Ln.M.நூருல்லா செயலாளர்கள் K.அக்ரிசரவணன், R.கமலக்கண்ணன் பொருளாளர் J.செல்வகுமார் மற்றும் லயன் சர்வீஸ் டிரஸ்ட் Ln.ஸ்மைல், S.ஆனந்த், R.முத்துராஜ்குமார், P.ஆனந்தகுமார் முன்னாள் தலைவர் Ln.கஸ்தூரிரங்கன், S.சதாம்உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக