பச்சரிசி - 1 கிலோ, வெல்லம் - 1 கிலோ, முந்திரி - 50 கிராம், திராட்சை - 50 கிராம், ஏலக்காய் - 10 கிராம், பாசி பருப்பு - 500 கிராம், ஆவின் நெய் - 100 கிராம், மஞ்சள் தூள் - 100 கிராம், மிளகாய் தூள் - 100 கிராம், மல்லி தூள் - 100 கிராம், கடுகு - 100 கிராம், சீரகம் - 100 கிராம், மிளகு - 50 கிராம், புளி - 200 கிராம், கடலை பருப்பு - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 500 கிராம், ரவை - 1 கிலோ, கோதுமை - 1 கிலோ, உப்பு - 500 கிராம், துணிப் பை ஒன்று. இவை தவிர கரும்பு ஒன்று வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கடைகள் மூலமாக நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற விவரம் வெளியிடப்படும். இதற்காக டோக்கன் வினியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நின்று மக்கள் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக