சேறும் சகதியுமாக காணப்படும் செஞ்சி கூட்டுறவு நியாயவிலைக் கடை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கூட்டுறவு நியாய விலை கடையின் முன்பும், உள்ளேயும் தொடர் மழையினால் மிகுந்த சேறும் சகதியுமாக உள்ள நியாய விலைக் கடைக்கு வரும் நுகர்வோர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் . இந்த நியாய விலை கடையில் செஞ்சி டவுனில் உள்ள சுமார் 4 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் மண்ணெண்ணெய் வாங்க வருகின்றனர். அதுமட்டுமல்லாது கூட்டுறவு நியாயவிலைக் கடை எண் -1 மற்றும் 2, ஆகிய இரண்டு கடைகளில் சுமார் 800 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, பருப்ப, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் அங்கு தேங்கும் நீரினால் கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு வரும் நுகர்வோர்களுக்கு டெங்கு மலேரியா சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர். இதற்கு செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment

புதியது பழையவை