விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த பதிய ஆவின் பாலகம் செஞ்சி அரசு மருத்துவமனை அருகே இன்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து அவர் மக்களுக்கு தனது கைகளால் ஆவின் பால், ஆவின்நெய் ஆகியன வழங்கி துவக்கி வைத்தார்.
ஆவின் பாலகம் திறப்பாள் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தை தாய்மார்கள், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு ஆவின் பால், நெய், மற்றும் ஆவின் உபபொருட்கள் கிடைக்கும். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆவின் பொது மேலாளர் கு.ரமேஷ்குமார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விற்பனை மேலாளர் S.அய்ங்கரன், செஞ்சி அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் சாஹிராபானு மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் R.விஜயகுமார் மற்றும் ஆவின் பாலகம் விற்பனையாளர் A.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக