செஞ்சியில் ஒமிக்ரான் கொரோனா, டெங்கு மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்த ஆட்டோ விழிப்புணர்வு பிரச்சாரம் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செக்கோவர் தொண்டு நிறுவனத்தின் மூலம் கொரோனா வைரஸின் (COVID-19) மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு நாளைய தலைமுறையான இன்றைய குழந்தைகளை காத்திட செஞ்சி மற்றும் மேல்மலையனூர் தாலுக்கா கண்களில் உள்ளடங்கிய 181 பஞ்சாயத்துகளில் செக்கோவர் தொண்டு நிறுவனத்தின் CAC திட்டத்தின் சார்பில் ஒமிக்ரான் கொரோனா, டெங்கு மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும், நோய் பரவாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், 
கொரோனா காலத்தில் குழந்தைகளின் பாதிப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பது பற்றியும், சித்த மருத்துவம் பரிந்துரை செய்யும் தனி சுகாதாரம் பேணுதல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு போஸ்டர்கள் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டு மக்கள் மத்தியில் சென்றடையும் வகையில் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செக்கோவர் இயக்குநர் திருமதி.அம்பிகாசூசைராஜ் அவர்கள் முன்னிலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆட்டோ விழிப்புணர்வு பிரச்சாரத்தினை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி வட்டாட்சியர் திரு. பழனி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. கலைவாணி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமதி. கோகிலா, செஞ்சி வட்ட மருத்துவ அலுவலர் டாக்டர். பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. கேசவலு, செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் திரு. விஜயகுமார், வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. அமுதாரவிக்குமார், மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. கண்மணிநெடுஞ்செழியன், வட்டார கல்வி அலுவலர் திரு.அக்ஸிலின் பெலிக்ஸ், செஞ்சி காவல் ஆய்வாளர் திரு. தங்கம், செஞ்சி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜோதி, நுகர்பொருள் கழக உறுப்பினர் திரு. ஜூலியஸ் ராஜா, DCPU திரு. சதீஷ், இணைந்து நில் மாமன்ற பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர். 
இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செக்கோவர் நிறுவன அலுவலர்களான திரு. ஜெயசீலன், ரவீந்திரன், திருமதி. கோடிஸ்வரி, சக்திவேல், வெண்ணிலா, ராஜாராமன், சுரேந்திரன், ராஜசேகர், டேனியல்அரசு, இன்பன்ட், ஜெர்வின், ஜெனிபர், மற்றும் அரவிந்தன்.

Post a Comment

புதியது பழையவை