இளம் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் சம உரிமைகள் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செக்கோவர் நிறுவன பயிற்சியரங்கில் 28/12/2021 முதல் 30/12/2021 வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 30 பழங்குடியின கிராமங்களை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 

இப்பயிற்சியில் செக்கோவர் நிறுவனர் திருமதி அம்பிகாசூசைராஜ் அவர்கள் தலைமையில், வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் திரு. அக்ஸிலின் பெலிக்ஸ் முன்னிலையில், முன்னாள் வட்டார வளர்ச்சி மேற்பார்வையாளர் திரு சிவா, குழந்தைகள் உரிமைகள் திட்ட அலுவலர்கள் திரு.ரவீந்திரன் திரு.ஜெயசீலன் இளங்குழந்தைகள் பராமரிப்பு மற்றும் சம உரிமை திட்ட அலுவலர்கள் திரு சக்திவேல், ராஜாராமன், வெண்ணிலா, இன்பன்ட் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி நந்திதா ஆகியோர் பயிற்சி அளித்தனர். 

இப்பயிற்சியில் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக UNCRC, போக்சோ சட்டம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம், அரசு தரும் அடிப்படை சான்றுகளை எவ்வாறு பெறுவது மற்றும் அரசு நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது போன்ற தலைப்பில் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டு அடுத்த ஓராண்டிற்கான செயல்திட்டத்தினை தாயார் செய்தனர். 

பின்னர் பயிற்சி அளித்தவர்களுக்கு வருவாய் ஆய்வாளர் திரு கண்ணன் பயிற்சி சான்றிதழை வழங்கினார் திரு ஜெயசீலன் நன்றி கூற பயிற்சி இனிதே நிறைவுற்றது.

Post a Comment

புதியது பழையவை