செஞ்சியில் 15 வயது முதல் 18 வரையிலான இளம் இளம் சிறார்களுக்கான முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்! அமைச்சர் துவக்கி வைப்பு!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 15 வயது முதல் 18 வரையிலான இளம் இளம் சிறார்களுக்கான முதல் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைச்சர் துவக்கி வைத்தார்.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் ஒவ்வொரு வாரமும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு முதலில் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களும், பின்னர் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி (covaxin vs covishield) போடப்பட்டுவந்த நிலையில் 03/01/2022 இன்று 15 வயது முதல் 18 வயது வரையிளான இளம் சிறார்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமினை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்திருந்த நிலையில்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் கொரோனா (COVID-19) தடுப்பூசி  15 வயது முதல் 18 வயது வரையிளான இளம் சிறார்களுக்கான (03/01/2022) சிறப்பு தடுப்பூசி முகாமினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள்  கொரோனா தடுப்பூசி பற்றிய அவசியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு சிறப்புரையாற்றி இம்முகாமினை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி, Dr.P.மலர்விழி M.B.B.S. செஞ்சி வட்டாட்சியர் பழனி, செஞ்சி காவல் ஆய்வாளர் தங்கம், சுகாதாரத் துறை Dr. மலர்விழி, Dr.பிரசன்ன, PTA தலைவர் C.மாணிக்கம் மற்றும் தலைமை ஆசிரியர் கோ.கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை