தமிழகத்தில் உள்ள 649 நகராட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.. 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.. இதன் மூலம் 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர், 3,468 நகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்..
இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தேர்தல் ஆணையர் பழனிகுமார் இந்த தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.. அதன்படி 649 நகராட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..
நகர்ப்புற தேர்தலுக்கான அட்டவணை :
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் தேதி : 28.01.2022
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் : 04.02.2022
வேட்பு மனு பரிசீலனை : 05.02.2022
வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல் : 07.02.2022
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் : 19.02.2022
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் : 22.02.2022
கருத்துரையிடுக