Top News

செஞ்சி கோட்டையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார ஆராதனை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அலங்காரமான ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

வீர ஆஞ்சநேயரை தரிசிக்க செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வீர ஆஞ்சநேயரை தரிசித்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அங்குள்ள இராஜகிரி கோட்டை மற்றும் இராணிக்கோட்டையினுள் உள்ள தர்பார் மற்றும் அந்தப்புர மண்டபங்கள், கல்யாண மஹால், குதிரை லாயம், நெற்களஞ்சியம், பீரங்கிகள், பூங்கா என பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர். 

கோட்டையை சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் அங்குள்ள ஆலமர விருதுகளில் ஊஞ்சல் ஆடியும், பூங்காவில் பச்சகுதிரை, கபடி மற்றும் கோகோ என பல விளையாட்டுகளை விளையாடி தங்களின் ஆங்கில புத்தாண்டின் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.


இதனையொட்டி கோட்டையினுள் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் செஞ்சி காவல் துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் காவல் பணியிலும் மேலும் செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர்கள் மற்றும் செஞ்சி அரசு மருத்துவமனை குழுவினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Post a Comment

புதியது பழையவை