தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் 2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக தற்போது அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 11/01/2022 முதல் 13/01/2022 வரை சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், வருகிற ஜனவரி 11ந்தேதி முதல் 13ந்தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மொத்தம் 6,468 பேருந்துகளும் இயக்கப்படும் எனவும், சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே. நகர் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டிலிருந்தும் மற்ற பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படும். அதே போல், பொங்கல் முடிந்து ஊர் திரும்பவும் வசதியாக 16, 709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்' எனவும் தெரிவித்தார்.
கருத்துரையிடுக