Top News

"காய்ச்சல், சளி, இருமல்" இருந்தால் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்."தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு."

 

    

காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளன. அதேபோல் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக சுகாதாரத் துறை. இதன் முக்கிய அம்சங்கள்:

சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி இருப்போர் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர்கள் அறிகுறிகள் இல்லாத போதும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை