விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.538 மதிப்பிலான 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் கே.எஸ் மஸ்தான் அவர்கள் மக்களுக்கு வழங்கினார்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையுடன் பரிசுத்தொகுப்பும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,297 கோடி செலவில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தலைமைச் செயலகத்தில் இன்று (04/01/2022) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனடிப்படையில்,
இந்நிகழ்வில் திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் இ.ஆ.ப, மைலம் சட்டமன்ற உறுப்பினர் C.சிவக்குமார், செஞ்சி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வி.ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள 21பொருட்கள் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், முழு கரும்பு ஒன்று போன்றவை துணிப்பையில் வழங்கப்பட உள்ளது.
கருத்துரையிடுக