செஞ்சியில் ஆட்டோ, வேன் ஓட்டுனர்களுக்கு முககவசம் அணிவித்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்.

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

கொரோனா எனும் கொடிய வைரஸின் நோய்த் தொற்று குறைந்துவந்த நிலையில் உருமாறி டெல்டா வைரஸ், ஒமிக்ரான் என தற்போது மீண்டும் நோய்த் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால்,

அனைவரும் பாதுகாப்பாக இருக்க சமூக இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதலின் அவசியம் குறித்து விளக்கிக் கூறி நோய்த்தொற்று ஏற்படாமல் தங்கள், தங்களின் குடும்பம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா அவர்கள் ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள், சுமைை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் அணிவித்து சானிடைசர் வழங்கினார். இந்நிகழ்வில் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், காவல் ஆய்வாளர் திரு.தங்கம், மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.பலராமன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை