ஞாயிறு முழு ஊரடங்கில் அரசு மற்றும் தனியார் தேர்வு நிறுவனங்களுக்கு, தமிழக அரசு அறிவிப்பு.

 

தமிழகத்தில் நேற்று (ஜனவரி 6ம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு என்பதால் பேருந்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது மத்திய / மாநில அரசு மற்றும் தனியார் தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வோர் தங்கள் ஹால் டிக்கெட் அல்லது அழைப்புக் கடிதத்தை போலீசாரிடம் காண்பித்து பயணம் செய்யலாம். இதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை