தமிழ்நாடு பகுதி நேர சிறப்பசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

 

கடந்த 10 ஆண்டுகாலமாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 தினங்களாக சென்னை பள்ளி கல்வி இயக்கம் (DPI) வளகத்தின்னுள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2012 ஆம் ஆண்டில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது 12000 சிறப்பாசிரியர்கள் பகுதி நேர அடிப்படையில் 5000 தொகுப்புதியத்தில் நியமிக்கபட்டனர். அவர்களுக்கு 2014ல் 2000ருபாயும், 2017ல் 700ரூபயும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது மிகவும் வறுமை நிலையில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி வருகின்றனர்

10 ஆண்டுகளாக பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர் பணியிடத்தை நிறந்தர பணியாக அறிவிக்க கோரி அனைத்து மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் ஒன்றினைந்து சென்னை டிபிஐ வளாகத்தினுள் தமிழக அரசு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் சுமார் 7000 பகுதி நேர ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை உடன்படிக்கை எட்டும் வரை பேராட்டத்தில் ஈடுபடுவேம் என தொரிவித்தனர் 10 ஆண்டுளாக அரசுக்காக உழைத்து வறுமை நிலையில் வாடும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை இந்த தமிழக அரசு மேம்படுத்துமா?

Post a Comment

புதியது பழையவை