ஏழை மக்களுக்கான அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்ட தமிழக அரசின் பங்காக ரூ.2,030 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.. தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும்.. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருத்தப்பட்ட இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் தலைமையின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் முழு பட்ஜெட் ஆகும்.. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டை காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்..
பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :
* வரையாடு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு..
* முதலமைச்சரின் விரிவான மருத்துக்காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி ஒதுக்கீடு
* மருத்துவ துறைக்கு ரூ. 17,901 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
* குறுவை சாகுபடி சிறப்பாக மேற்கொள்வதற்காக 10 மாவட்டங்களில் ரூ.80 கோடி செலவில் 4966 கி.மீ கால்வாய்கள் சீரமைக்கப்படும்..
* தமிழகத்தில் 149 சமத்துவபுரங்கள் ரூ.190 கோடியில் சீரமைக்கப்படும்
* முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்..
* மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு ரூ.2800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..
* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ705 கோடி ஒதுக்கீடு
* ஏழை மக்களுக்கான அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்ட தமிழக அரசின் பங்காக ரூ.2,030 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு
* நகர்ப்புற பகுதிகளை மேம்படுத்த 500 பூங்காங்கள் அமைக்கப்படும்.
* சென்னையை மேம்படுத்தும் சிங்காரச் சென்னை திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..
* கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது..
* புதிதாக உருவாக்கப்பட்ட 6 புதிய மாவட்டங்களில் ரூ.36 கோடி செலவில் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும்
* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது..
* துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது..
கருத்துரையிடுக