வெளிநாட்டில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ.65 ஆயிரம் அமைச்சர் மூலம் நிதி!

 

மார்ச் 9, செஞ்சயில் வெளிநாட்டில் வாழும் தமிழர் நலச்சங்கம் சார்பில் வெளிநாட்டில் பணிபுரிந்தவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழக வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மூலம் ரூ. 65,000/- நிதி உதவி வழங்கப்பட்டது.

சவுதியில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் குயிலம் கிராமத்தைச் சேர்ந்த பரதன் விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருந்து அவரை மீட்டு தமிழகம் கொண்டு வந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேல் சிகிச்சைக்காக அவர்களின் குடும்பத்தினரிடம் மருத்துவ செலவினங்களுக்காக ரூபாய் 35 ஆயிரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குவைத்தில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருக்கும் மதியழகன் குடும்பத்தினருக்கு ரூபாய் 30 ஆயிரமும் மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது.

மேலும் குவைத்தில் பணிபுரியும் தமிழ் மீனவர்களுக்கு ஈரான் நாட்டின் கடற்கொள்ளையர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் தங்களுடைய வலைகள், கைப்பேசிகள், உடைமைகள் மற்றும் கடலில் பிடிக்கும் மீன்களையும் கொள்ளை அடித்துக்கொண்டு படகுகளை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளதாகவும் குவைத்தில் பணிபுரியும் தமிழ் மீனவர்கள் சுமார் 300 பேர் குவைத் நாட்டில் தற்சமயம் பணி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக வேண்டி தமிழக அரசும் துறை அமைச்சர் அவர்களும் உரிய அரசாங்கத்திடம் பேசி கடல் எல்லையில் பாதுகாப்பு வழங்க ஆவண செய்யுமாறு மனுவும் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் கண்ணன் ஊடகப்பிரிவு அப்துல் ரகுமான் திண்டிவனம் சர்வீஸ் லைன் சங்கத்தின் தலைவர் நூருல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

புதியது பழையவை