நடுவனந்தல் கிராமத்தில் மாசியில் மயான கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடுவனந்தல் கிராம குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் மாசி 22 நாள் (06/03/2022) மயானகொள்ளை விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சந்தன காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆலயத்திலிருந்து அம்மன் 16 கரங்களுடன் சிறப்பு அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் அங்காளியாய் அமர்ந்து, பூம்பாறை, காளி வேஷம், பாவாடைராயன், ஆண்பூதம், பெண்பூதம், குறத்தி வேடத்துடன் பம்பை, உடுக்கை, நாதஸ்வரம், நையாண்டிமேளம் இசைக்க பக்தர்கள் நடனமாடியபடி மயானத்திற்கு சென்றனர்.

அங்கு மண்ணால் உருவாக்கப்பட்ட வல்லாளகண்டன் உருவபொம்மை முன்பு கொழுக்கட்டை, சுண்டல், தானியங்கள், காய்கறிகள் படையலிட்டு அங்காளி ஆவேசத்துடன் மயானகொள்ளை விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் மக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Post a Comment

புதியது பழையவை