செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார்மலை, ஊரக பகுதியில் உள்ள திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் (20-03-2022) காலை 10 முதல் 1 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆசிரியர் திருமதி. மங்களேஸ்வரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமை ஆசிரியர் திருமதி. S.J. பனிமயம் பெர்னாண்டோ கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்,
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி
மன்றத் தலைவர் திருமதி. ஜனனி சுரேஷ், துணைத் தலைவர் திருமதி ருக்மணி சக்தி, வார்டு உறுப்பினர்கள் திருமதி சூரியா பாபுஜி, செல்விராபர்ட் பொண்னுவேல் ஆகியோர் கலந்துக்
கொண்டு சிறப்பித்தனர். இதில் திருவஞ்சேரி இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் 5 பேரும் மற்றும் பெற்றோர்கள் 161 பேரும் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர்
திருமதி ஜனனி சுரேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியர் S.Jபனிமயம் பெர்னாண்டோ அவர்கள் கடந்த ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன்
நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பள்ளி மேலாண்மை குழு
செயல்பாடு குறித்து விளக்கினர். இதில் கல்வி உரிமை சட்டம் குறித்தும்,மாணவர்கள் சேர்க்கை, மாணவர்கள்
இடைநிற்றல்
வருகையை
குறித்தும், மாணவர்கள் ஒழுக்க
முறைகள் மற்றும் ஆரோக்கியத்தை குறித்தும், பள்ளியை மேம்படுத்துதல், பராமரிப்பு,
கல்வியை மேம்படுத்துதல்
பற்றியும், இதில் பெற்றோர்களின் பங்களிப்பு போன்றவற்றை
பற்றி விளக்க உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் பெற்றோர்களின் கருத்துக்களும்
பகிரப்பட்டது.
விழிப்புணர்வு
கூட்டம் கடைசி நிகழ்வாக பள்ளியின் உதவி ஆசிரியர் நன்றி உரை நிகழ்த்த, தேசிய கீதத்துடன் பள்ளி மேலாண்மை விழிப்புணர்வு
கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
கருத்துரையிடுக