விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தையூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்(20-03-2022) காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலில் மாணவர்கள் இறை வணக்கம் பாட கூட்டம் இனிதே தொடங்கியது. ஆசிரியர் திரு V.வேணு அவர்கள் வரவேற்புறை நிகழ்த்தினார் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.பூ.அன்பழகன் அவர்கள் முன்னிலையில், தையூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரா.திருமுருகன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாரதி தமிழ்வாணன் தலமையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் அடுத்த நிகழ்வாக தலைமை ஆசிரியர் திரு.மணிவண்ணன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்த, பட்டதாரி ஆசிரியர்கள் திரு.D.பிரேம்சந்தர், திரு.R.மோகன்ராஜ், திரு.K.கோபிநாதன் ஆகியோர் (smc) பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு குறித்து விளக்கினர். மாணவர்கள் வருகை குறித்து ஆசிரியர் திரு. L.கமலகண்ணன் அவர்கள் விளக்க உரை நிகத்தினார் அவரை தொடர்ந்து மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து ஆசிரியர் திரு.M.ஜெகன்பாபு, மாணவர்களின் ஒழுக்கம் குறித்து ஆசிரியர் திரு.I.விஜயகுமார், பள்ளி பராமரிப்பு மற்றும் பெற்றோர்களின் பங்கு குறித்து ஆசிரியர் திரு.M. ஏழுமலை ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பெற்றோர்களின் கருத்துகளும் பகிரபட்டது, அதன் அடிப்படையில் மாணவர்கள் நலன் கருதி குடிநீர் பிரச்சனை குறித்து கை விசைபம்பை சரிசெய்ய கோரி ஊராட்சி மன்றதலைவரை ஆசிரியர்கள் கேட்டுகொண்டதன் பேரில், உடனடி தீர்வாக கை விசைபம்பு சரிசெய்யபட்டது.
விழிப்புணர்வு கூட்டத்தின் கடைசி நிகழ்வாக துணை தலைமை ஆசிரியர் திருமதி C. சங்கிதா அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, தேசியகீதத்துடன் பள்ளி மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம் இனிதே
நிறைவுபெற்றது.
கருத்துரையிடுக