தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் செஞ்சி இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு பேரணியை மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. கோ.கிருஷ்ணப்பிரியா, செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. இரா.கலைவாணி, செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம்.மொக்தியார்அலி அவர்கள் உடனிருந்தனர்.
இக்கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி, செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட, சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் மற்றும் சக மாணவர்கள்
கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து,
* சாராயத்தை நீ குடிக்காதே, சாவை நீ தேடாதே,
* ஒழிப்போம், ஒழிப்போம், மதுவின் மரணப்பாதையை ஒழிப்போம்,
* சாராயத்தை அழிப்போம், சமூகத்தை காப்போம்!, உள்ளிட்ட வாசகங்கள் பொருந்திய பதாகைகள் ஏந்தியபடி முழக்கங்கள் இட்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது காந்தி கடை வீதி, செஞ்சி நான்கு முனை சந்திப்பை சென்று பள்ளியை வந்தடைந்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் கோ.கணபதி, தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.டி.பாலசுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.நாகமுத்து, திட்ட அலுவலர் கே.ஏழுமலை, தேசிய மாணவர் படை பயிற்றுநர் ஆர்.குமரவேல் மற்றும் சக ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக