செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி நகர் மன்ற தலைவர் பொறுப்பேற்பு விழா! அமைச்சர் பங்கேற்பு!!

 

மார்ச் 9. 2022 அன்று செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சியின் நகர் மன்ற தலைவராக திரு. கே.எஸ்.எம்.மொக்தியார்அலி அவர்கள் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ.மஸ்தான் அவர்கள் முன்னிலையில் தலைவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 17- வார்டுகளில் திமுக உறுப்பினர்களும் ஒரு வார்டில் அதிமுகவும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற 18 வார்டு உறுப்பினர்களும் மார்ச் 2 -ம் தேதி பேரூராட்சியின் செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். மார்ச் 4 -ம் தேதி வார்டு உறுப்பினர்கள் தலைவராக மொக்தியார்அலி அவர்களை தேர்ந்தெடுத்தனர். பின்னர் செயல் அலுவலர் ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் கே.எஸ்.எம்.மொக்தியார்அலி அவர்கள் தலைவராக பதவியேற்றார்.

தலைவர் பதவியேற்ற அவருக்கு மார்ச் 9 -ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் முன்னிலையில் செஞ்சி பேரூராட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்து தலைவர் பொறுபினை ஏற்றுக் கொண்டார். 

பின்னர் இவ்விழா மேடையில் மக்கள் முன்னிலையில் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சியின் தூய்மை மற்றும் வளர்ச்சி குறித்து

* பி ஏரியில் நடைபாதை விளையாட்டு பூங்கா மற்றும் மின் விளக்கு வசதி அம்ரூத் 2.O திட்டத்தின் கீழ் ரூபாய்க்கு 2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* நபார்டு திட்டத்தின் கீழ் நாட்டேரி இருளர் காலனி முதல் பவதாரணி அம்மன் கோயில் வரை ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் மற்றும் கொத்தமங்கலம் சாலை முதல் சிறு வாடி காப்புக்காடு வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்படும்.

* தேசூர்பாட்டை சமுதாயக்கூடம் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

* சக்கராபுரம் புதிய காலனி, சிறுகடம்பூர் காலனி, சந்தை தோப்பு மற்றும் விழுப்புரம் சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு (OHT) சுற்றுச்சுவர் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள நவாப்குளம் (பேரூராட்சி குளம்) புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைபாதை அமைக்கப்படும்.

* செஞ்சி பேரூராட்சி பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய ஏற்கனவே செஞ்சி அனந்தபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்படுத்திவந்த அத்தியூர் சம்ப் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* செஞ்சி நகரப்பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட அனைத்து தெருக்களில் பைப்லைன் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

* செஞ்சிக்கோட்டை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா தலமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* செஞ்சி நகர பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட முல்லைநகர், ஜீவாநகர், வ.ஊ.சி. தெரு தொடர்ச்சி, மல்லிநகர், வேலன்நகர், வி.பி.என்.நகர் தொடர்ச்சி, சபரிநகர், பானுமதிகணேசன் நகர், செம்மொழி நகர் ஆகிய பகுதிகளில் தெருமின் விளக்குகள் அமைக்கப்படும்.

* காந்தி பஜார் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசூர்பாட்டை சாலையை அகலப்படுத்தி இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை மூலம் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கண்ணகி நகரில் மழைநீர் தேங்காதவகையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்படும்.

* ரங்கசாமி தெரு முதல் வி.பி.என்.நகர் வரை மழைநீர் தேங்காத வகையில் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கப்படும்.

* செஞ்சி நகரத்தில் குடிசைப்பகுதியில் வசிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு முதல் கட்டமாக 50 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் குடியிருப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* கிருஷ்ணாபுரம் தேசூர்பாட்டை பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும்.

* ராஜேந்திரன் நகர் 6 வது தெரு பகுதியில் மழைநீர் தேங்காதவகையில் வடிகால் அமைக்கப்படும்.

* செஞ்சி பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க நிரந்தரமான இடம் தேர்வு செய்யப்படும்.

* மேல்களவாய் சாலை சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் கருமகாரியகக் கூடம் அமைக்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் திருவண்ணாமலை சாலையின் இருபுறமும் வடிகால் அமைக்கப்படும்.

* பி ஏரிக்கரை மதகுபகுதியில் தற்காப்பு சுவர்(Retaining Wall) அமைக்கப்படும்.

* முல்லை நகரில் விடுபட்ட பகுதியில் தார்சாலை அமைக்கப்படும்.

* அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மற்றும் அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

* செஞ்சி பேரூராட்சி பகுதியில் நவீன வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும்.

* செஞ்சி இராஜகிரிகோட்டை நுழைவு வாயிலில் இராஜாதேசிங்கு மன்னரின் பெருமை சேர்க்கும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் நுழைவுவாயில் அமைக்கப்படும்.

* செஞ்சி இராஜகிரிகோட்டை நுழைவு வாயில் முதல் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் வெங்கட்ரமணர் கோயில் வரை தார் சாலை, வடிகால் மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும்.

* மேட்டுப்பாளையம் காலனி பகுதியில் சமுதாய கழிப்பிடம் அமைக்கப்படும் மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து சமுதாய கழிப்பிடங்கள் மற்றும் கட்டண கழிப்பிடங்கள் சீரமைக்கப்படும்.

* சிறுகடம்பூர் காலனிபகுதியில் நியாய விலைக்கடை அமைக்கப்படும்.

* பேரூராட்சியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை மேறிக்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார்.

செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சியை திமுக தொடர்ந்து 6 வது முறை கைப்பற்றி தலைமை பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

புதியது பழையவை