செஞ்சியில் விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின், மாவட்ட செயற்குழு கூட்டம்!

 

   ஜூலை 17, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எ.டி.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டாக்டர் டெய்சி சரண் மாநில அலுவலக செயலாளர் சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் இக்கூட்டத்தில் 

* பாரத பிரதமர் அவர்களின் மக்கள் நல திட்டங்களின் பயன்களை பாராட்டி நன்றி தெரிவித்தல்,

* விழுப்புரம் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்,

* நந்தன் கால்வாயை முழுமையான பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி தமிழக அரசை வலியுறுத்தல்,

* காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக தொடர்ந்து சமூக நீதிக்கு எதிராக செயல்படும் திமுக அரசைக் கண்டித்தும்,

* மலர் சாகுபடி விவசாயிகளுக்கு குளிர் பதன கிடங்கு வேண்டி தமிழக அரசை வலியுறுத்தல்,

* 75 வது சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் இரயில் சந்திப்பு நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு மகாகவி பாரதியார் பெயர் சூட்ட தேசிய நெடுஞ்சாலை துறையை வலியுறுத்தல்,

* பாரதப் பிரதமர் மற்றும் பாஜக மாநில தலைவர் அவர்களையும் மிகவும் தரை குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தவர் திமுக நிர்வாகி என்பதால் கைது செய்யாத மாவட்ட காவல்துறையை கண்டித்தும் தொடர் போராட்டம்,

* விக்கிரவாண்டியில் உள்ள தொன்மையான அகஸ்தீஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்திட தமிழக இந்து அறநிலையத்துறையை வலியுறுத்தல்,

* ஜல் ஜீவன் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்,

* இளைஞர்கள் நலன் காக்க விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கம் வேண்டி மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்,

* வரலாற்று சிறப்புமிக்க செஞ்சியை நகராட்சியாக அறிவிக்க வேண்டியும்,

* பயோ கேஸ் மற்றும் உயிரி உற்பத்தி மையம் அமைத்து விவசாயிகள் வருமானம் அதிகரிக்க மாநில அரசை வலியுறுத்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவ தியாகராஜன், மாவட்ட பொது செயலாளர்கள் பாண்டியன், ராம ஜெயக்குமார், சத்தியநாராயணன், மாவட்ட பொருளாளர் சுகுமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.விநாயகம், தொழிலதிபர் கோபிநாத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக செஞ்சி நகர தலைவர் ராமு அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Post a Comment

புதியது பழையவை