இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 24ம் தேதி மாநிலம் முழுவதும் TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது, தேர்வுக்கான அட்மிட் கார்டு (hall ticket) 2022 வியாழக்கிழமை 14//07/2022 காலை வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த போட்டி தேர்வுகளை தமிழ்நாடு அரசு (TNPSC) நடத்தி வருகிறது. மேலும் கொரோனா காலகட்டத்தில் TNPSC தேர்வுகள் நடத்தப்படவில்லை, இந்நிலையில் தற்போது நிலைமை சீராகி வருவதால் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் அடிப்படையில் குரூப்-4 தேர்வுக்கு சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வானது காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த தேர்வுகள் மூலம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உட்பட 7,382 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி:
* tnpsc.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
* ”ஆன்லைன் சேவை”என்பதை கிளிக் செய்ய வேண்டும்
* ”ஹால் டிக்கெட் பதிவிறக்கம்” என்பதை கிளிக் செய்யவும்
* பின்னர் வலதுப்பக்த்தில் கொடுக்கப்பட்டுள்ள ”Download Hall Ticket” என்பதைக் கிளிக் செய்யவும்.
* ‘TNPSC குரூப் 4 தேர்வு’ இணைப்பை கிளிக் செய்யவும்
* உங்கள் பதிவு எண் மற்றும் தேவையான விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
கருத்துரையிடுக